ஆன்லைன் டைமர்

முழு திரை

டைமரை அமைக்கவும்

ஒலி?

மீதமுள்ள நேரம்

டைமர் என்றால் என்ன?

கால இடைவெளியை அளவெடுக்கும் கடிகாரம் என்று கூறப்பட்டாலும், டைமர் பொதுவாக குறிப்பிட்ட காலத்திலுருந்து தலைகீழாக நேரம் எண்ணப்பட்டு, அக்காலம் முடிந்தபின் ஒலியெழுப்பும் சாதனமாக பயன்படுகிறது.

டைமர் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

வரலாற்றில் முதன்முதலில் காலத்தை அளவெடுக்க பயன்படுத்தப்பட்ட சாதனம் நீர்க்கடிகாரம் ஆகும். இது கி.மு. 16ம் நூற்றாண்டிலிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்தது. கி.பி. 8ம் நூற்றாண்டில் பிரெஞ்சு பாதிரியார் ஒருவரால் மணல் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டதாக சிலர் கூறினாலும், அது 14ம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்படவில்லை. மேலும், 1926ல் தாமஸ் நார்மன் ஹிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட முட்டை டைமர் தான் உலகின் முதல் இயந்திர கடிகாரங்களில் ஒன்றாகும்.

டைமரை எப்படி பயன்படுத்துவது?

கிச்சன் டைமர் போன்ற இயந்திர டைமர்களை பயன்படுத்த தேவையான நேரக்குறியீடு வரை எதிர்த்திசையில் திருப்பினால், டைமர் தொடங்கும். டிஜிட்டல் டைமர்களை பயன்படுத்த, தேவையான மணி, நிமிடம், நொடியை உள்ளிட்டு ஸ்டார்ட் பட்டனை அழுத்தவும்.

டைமரை எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?

பல்வேறு பயன்கள் இருப்பினும், டைமர்கள் பெரும்பாலும் உணவு சமைக்கும் நேரம் மற்றும் மாணவர்கள் பரீட்சைகளுக்கு படிக்கும் நேரம் ஆகியவற்றை அளவிட உதவுகிறது.

டைமருக்கும் ஸ்டாப் வாட்ச்சுக்கும் என்ன வித்தியாசம்?

டைமர் குறிப்பிட்ட நேரத்திலிருந்து தலைகீழாக நேரத்தை எண்ணுகிறது. ஸ்டாப் வாட்ச் எவ்வளவு காலம் கடந்துள்ளது என்பதை எண்ணுகிறது.

என் கணினியில் டைமர் எங்கிருக்கிறது?

பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் டைமர் இயல்பாக இருப்பதில்லை. விண்டோஸ் மற்றும் மேக் பயன்படுத்துபவர்கள் உரிய செயலியை ஆப் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கலாம், அல்லது ஆன்லைன் டைமரை பயன்படுத்தலாம்.

ஆன்லைன் டைமர் என்றால் என்ன?

மணி, நிமிடம் மற்றும் நொடி அளவில் டைமர் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு எளிய, நடைமுறையான தேர்வு ஆன்லைன் டைமர் ஆகும்.

ஆன்லைன் டைமரை பயன்படுத்துவது எப்படி?

ஆன்லைன் டைமரை பயன்படுத்த முதலில் “டைமரை அமைக்கவும்” என்ற பகுதியில் கவுண்ட் டவுன் காலத்தை உள்ளிட்டு, பின் அலாரம் ஒலியை தேர்ந்தெடுத்து பின் “Start” பட்டனை அழுத்தவும்.